a
காதல் பிசாசு 3
3 . பெண்ணா பேயா
கட்டவிழ்ந்த மல்லிகையை கன்னியவள் சூடியதால்
விட்டெழுந்த பூவாசம் விரைந்து மனம்மயக்க
பொட்டிட்ட பாவையினைப் பூமலரைக் கைகொள்ள
எட்டியவள் கையணைக்க ஏழைமனம் துடிதுடிக்க
மெல்ல அருகில்வர மேனியழ கென்சொல்வேன்
கொள்ளை யழகுஇவளைக் கூடுவதே என்நிலையாம்
இல்லை இவளெனக்கு என்னி லுயிர் மாண்டிடுவேன்
இந்த உலகைஇவள் ஒன்றினுக்காய் தந்திடுவேன்
அங்கே அவள்முகத்தை ஆசையுடன் நான்விழித்துப்
பெண்ணே உனையடையப் பெருந்தவமே பண்ணியுள்ளேன்
இன்றே முதல்உனக்கு எனையல்லால் யாருமிலை
வந்தே கலந்துவிடு வாழ்விலுனை அற்புதமாய்
பொன்னாய் பெரும்பொருளாய் பொக்கிஷமாய் பார்த்திடுவேன்
என்னில் அயலிருத்தி எழிலேநற் சேவைசெய்வேன்
துக்கம் தவிர்உனக்கு சொந்தமென நானிருப்பேன்
வெக்கம் தவிர்மனமோ வேண்டுவதை கேள்என்றேன்
என்னை என்பெண்உடலில் உள்ளசுவை அத்தனையும்
ஏதறியேன் இற்றைவரை என்னுயிராம் மன்னவரே
முன்னர் ஒருவிரலும் மேனிதொட்ட தில்லையிவள்
பொன்ழகைக் கண்ணாடி புறங் காண வேறறியேன்
காட்டின் நடுவினிலே காயும்நில வாயிருந்தேன்
வீட்டின் சுவர்அறியும் வேதனையை என்நிலையை
பாட்டின் சுவைஅறிவேன் பஞ்சணையின் சுகமறியேன்
நாடியெனை அணைத்து நல்லகதை சொல்லிடுவீர்
கட்டவிழ்ந்த மல்லிகையைக் கன்னியவள் சூடியதால்
விட்டெழுந்த பூவாசம் விரைந்து மனம்மயக்க
கொட்டியது காசுஎனக் கொல்லென்று சிரித்தவிதம்
அத்தனையும் கொள்ள ஆசைமனம் ஏங்கியதே
சட்டென்று நாயொன்று சத்தமிட்டு ஊளையிட
கத்தியதோர் ஆந்தைகுரல் காதில் விழுந்திடவே
பக்கென் றடித்து மனம் பதறக் குளிர்த்தென்றல்
திக்கில் அடித்து ஒளித் தீயை அணைத்ததுவே
கும்மிருட்டில் அந்தக் கோதை அருகணைந்து
அன்பேஎன் ஆணழகே யாருமற்ற பேதைஎன்னை
எண்ணாக் கொடுமைசெய்த இளமைதனைப் பழிசெய்ய
பொல்லாக்கரமெடுத்து போதும்வரை கேட்டுவிடும்
கண்ணாலே பார்த்துக் காதல் மனம் கூசிஉடல்
புண்ணாகித்துடிக்க புன்னகையால் கொன்றுவிடு
ஏனோ இவள்தனுக்கு இத்தனைநாள் துன்பமிட்டாய்
ஆமோ முறையோ என் றத்தனையும் கேட்டுவிடு
கிட்டே அவள்அணுகி கிண்ணமொன்றில் பாலூற்றி
வெட்கி நின்றேதந்த வஞ்சியினைக் கண்பார்த்து
பூங்கை எழில்உணர்ந்து புன்னகைத்து பாற்குவளை
வாங்கி என் வாயிலிட்டேன் வழிந்ததுவோ இரத்தமடா
துடித்து எழுந்துநின்றேன் துப்பி உமிழ்ந்து வைத்தேன்
பிடித்ததோ கிண்ணமல்ல பிளந்ததோர் மண்டையென
கண்டேயக் கான்னிதனை கனலெறித்த நெஞ்சோடு
மீண்டும் கண்பார்க்க மேனிஅதிர்ந் தாடியதே
பெண்ணல்ல அங்கே பிறிதோர் உருக்கண்டேன்
வெண்ணெய் உருகுமெழில் விளைந்த உடல்கறுத்து
கன்னம்எரிந் துமுகம் கண்பிளந்து வாய்வெடித்து
என்னசொல் வேன்இருட்டில் பேயாக அவள்நின்றாள்
( மிகுதி 4 ல் தொடரும்)

No comments:
Post a Comment