உண்மை உருவாகி.. பகுதி 6
(ஏதோ மனதிரங்கி இருளடைந்த காட்டினிலே
தீதே அறியாமல் தேடிஒரு துணை இன்றி
ஊதி எரிநெருப்பில் உடல் கருக்கச் சென்றவளை
பாது காத்திவளின் பனிமலர்ப் பூங்கரம்பிடித்து
வாழ்வு கொடுத்திட நான் விரும்பி அருகில்வர
நாளும் அருகிருத்தி நலம்செய்வோமென நினைக்க
பாழும் பிசாசுஎனைப் பசிக்குண்ண வந்தனையோ
தேளும் கொடும்பாம்பில் தீயவளே நில்என்றேன் )
.............................
அங்கே ஓர்கணத்தில் அலைபோல் மிதந்துருகி
வந்த செயல் விட்டுமனம் வலிந்து புன்னகைத்து
சாந்தம் அடைந்தவளாய் சரிபாதி பெண்ணாகி
மீதமுரைத்ததனை மெய்சிலிர்க்கக் கேட்டுநின்றேன்
பேயல்ல நானுமொரு பிணம் தின்னும் பிசாசல்ல
நீயே நினைத்தபடி நீசமனம் எனக்கல்ல
உந்தன் உள்ளமதில் உள்ள மனச்சாட்சியும்நான்
இந்த உருவெடுத்து இளமகளாய் பெண்ணானேன்
கண்ணிற் காண்கின்ற கன்னியர்கள் அத்தனையும்
மண்ணில் அடைந்துவிட மனம் எண்ணும் பித்தனே
உன்னை உனக்கே யார் என்று இனம் காட்டிடவே
என்னைப் பெண்ணாக்கி எதிர் நின்று பாட்டிசைத்தேன்
கட்டியது சேலையெனில் கலங்கி மனஉறுதி
விட்டவரின் பின்னாலே வீணாகச் செல்லாதே
கண்ணாலே பார்த்துருகி கதைபேசிக் கட்டழகுப்
பெண்ணின் மனதேய்த்துப் பொய் பேசிக்கூடாதே
பெண்ணும் அவள்தான் பேயாகுவாள் அன்பு
கண்ணே என்றணைக்கக் கனிவான தாயாவாள்
தன்னையே உனக்கீந்து தன்குலத்தைக் காக்குமொரு
உன்னதமானவளும் உயிர்த் தெய்வம் அவளேகாண்
கண்டதும் மஞ்சத்துக் கழைத்திடும் பெண்களும்
காதலை காசெண்ணி விற்றிடும் பெண்களும்
உண்டென்று எண்ணி உள்ளத்தே காமத்தீ
பொங்கி வழிந்திடநீ புறப்பட்டுச் செல்லாதே
காதல் செய், ஒருத்தியைக் கைபிடித் தேற்றபின்.
காண்பதை அவளிடம் கண்டே நீ இன்பம் கொள்
ஆதல் இதுவன்றி அடுத்தபெண் நோக்காதே
ஈனச்செயல் செய்து இளமைதனைக் கெடுக்காதே
உந்தன் உள்ளத்துள் உறங்கியே கிடக்கிறேன்
என்னை நீஎழுப்பாதே எழுந்துவிடில் உன்னை நான்
பேயாய் சுடுகாட்டில் பிணம் தின்ன அலைவதுபோல்
நீயும்பெண் உடல்பின்னே நிலையற் றலையவைப்பேன்
//சொல்வது நன்றே ஆயின் சொந்தமென் றானவளும்
கல்மனது கொண்டு கடுஞ்சீற்றம் கலகமிட்டு
நல்லுறவு கெட்டே நடப்பளெனில் நாம்வேறு
நங்கைதனைத் தேடல் நீதியிலை என்பதுமேன்?//
தன்னலம் தனியெண்ணித் தருகின்ற வார்த்தையிது
பெண்ணின் மனம் கொண்ட பெருந்துயரை அறியாமல்
என்னவளின் கோபம் ஏதிதனின் காரணி யென்
றுள்ளம் கொள்ளாது ஒருசார்பாய் முடிவெடுத்தே
இல்லாள் எனதடிமை இவளெனது போகமென
கல்லாய் உணர்வுகொண்டு காதலியை புறம்தள்ளி
நில்லாதே நேசமுடன் நிறுத்தி அவள் மனதில்
சொல்லாத சேதிஎன்ன சொல்ல வை, குறை தீர்ப்பாய்
கைபிடித்துக் காலமெலாம் காதல் சுகமளித்து
மெய்நொந்து பிள்ளைபெற்று மேனிகுலைந்தே குலத்தை
பொய்யாது காத்துமுடல் போய்ச்சுடலை சேரும்வரை
உன்னோடு இருப்பவளை உயர்வாக உள்ளம்வை!
பெண்ணே தாயாவாள் பெண்ணே பேயாவாள்
பெண்ணே இன்பமெனும் பெரும்ஊற்றின் பிறப்பிடமாம்
பெண்ணே துன்பமாம் பெண்ணே கடவுளுமாம்
பெண்ணைச் சிலை செய்யும் பெரும்சிற்பி ஆணாவான்
கூறிக்கணம் செல்லக் கோரஉருப்பேய் மறைந்து
போக இருள்தானும் கூடியதோர் சுடுகாடும்
மாறிக் கரைந்துவிட மதிபிழ்ன்று சுவர் நடுவே
மீளப் படுத்திருந்தேன் மேனி பிழைத்தது போ!
கண்டதென்ன கனவா கருஇருளும் பேய் பொய்யா
மண்டைச் சிறுஓடும் மயக்கியதும் மாயையென
கொண்ட அனுபவமும் குலைநடுக்கம் விடவெண்ணிக்
கண்கள் கசக்கியந்த கட்டிலை விட்டெழுந்து நிற்க
கன்னி யொருத்திகுரல் கானமிசை கீதமொன்று
யன்னல் வழி வரவே யாரவளோ எனநோக்க
தென்னை நிறைந்த வொரு சிறுதோட்டம் வெளிதனிலே
பெண்ணொருத்தி நின்று பேசுங்குயிலா யிசைத்தாள்
(அவள் பாடுகிறாள்)
உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா
......???
(முடிந்தது)

No comments:
Post a Comment