4 . கட்டியணைக்க வந்த கரும்பேய்
என்னே ஒரு கோரம் எரி தீயில்வீழ்ந்தெழுந்து
கன்னிக் கறுத்த உடல் கண் ஒன்று குழியிருக்க
எரித்து உடைந்தகால் இடை தொங்கப் கையினிலே
பிடித்த பழத்தட்டில் பிணங்கிழித்த அங்கங்கள்
கட்டும் உடைதீய்ந்து கால்தெரிய இடைதெரிய
சுட்ட தீக் காயங்கள் சுற்றி உடல் இருக்க
பாதி எரிந்த பிணம் பற்றி எரி சிதைவிட்டு
ஓடி யிடை எழுந்த தோர்வகையாய் தோன்றியது
சுற்றிக் கண் பார்த்தேன் சிறுதொலைவில் அப்பாலே
கட்டை அடுக்கி கனல் சுழன்று எரிநெருப்பும்
பச்சைப்பிணம் எரிந்து பரவும் புகைதான் பார்த்தே
நெற்றிவியர்த்தேன் நான் நிற்பதென்ன சுடுகாடா
கன்னி எரி தீயின் முன்னிருந்து பாடுகையில்
என்னே மயங்கிவிட்டேன்இருந்த இடம்புரியாமல்
அன்ன நடையழகில் அறிவை மயங்கவிட்டு
பின்னால் பிணம் தின்னும் பேய்விரும்பி வந்தேனே
முன்னால் இருந்தவளோ முகம்தீய்ந்து கிழவியென
கன்னம் குழி விழுந்து கடைவாயில் நீர் வழிய
காலொன்று தீயெரிந்து கரியாகி சிறுத்திருக்க
வழிந்து சிறு வதனம் வற்றியதாய் எனைப் பார்த்து
வாராய் எனதழகே வந்தே என் கனியுடலைக்
கூடாய் கூடிஒரு கோடி இன்பம் தந்திடுவாய்
மோகம் களைந்துஎனை முத்தமிட்டுமுத்தமிட்டு
தாகம்தணித்துவிடு தந்துவிடு நீ எனக்கு
என்றே இருகரமும் எடுத்துயர்த்தி அணைப்பதென
வந்தாள் நடைதளர வாழ்விதிலே முடியுதென
எண்ணி இருந்தபாற் செம்பை எடுத்தவளை
கொண்டே அடிப்பதற்கு கொள்ளக் கை செம்பல்ல
மண்டைச் சிறுஓடு மனிதஉடல் தின்றபின்னே
கொண்டதோர் மிச்சமென குலைநடுங்க கவனித்து
விட்டே எழுந்து இடம் விரைந்தோடிப் போகவென
பட்டது மனதில் ஆனால் பாவியுடல் எழவில்லை
ஓட்டம் எடுத்தேன் ஒடினேன் கால்கள்தான்
ஆட்டம் புரிந்ததன்றி அந்த இடம் நகரவில்லை
வாடிச் சோர்ந்துமன வேதனயில் நான்திரும்ப
காட்டுகரும் பேயோ கையணைக்க வந்ததடா
(மிகுதி பகுதி 5 ல்)

No comments:
Post a Comment